உங்க புள்ளைய தட்டி கேக்க துப்பு இல்ல, என்ன கேள்வி கேக்குறீங்க? ஈஸ்வரியை வெளுத்து வாங்கிய பாக்யா.!

திருமணம் ஆகி வீட்டிற்குள் வந்த எழிலை வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்லி திட்டி தீர்க்கும் ஈஸ்வரியை தற்போது பாக்யா லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் இளைய மகன் எழிலுக்கும், அவரது காதலி அமிர்தாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. எழிலும் அமிர்தாவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதில் அமிர்தாவிற்கு திருமணமாகி சில வருடங்களிலேயே கணவனை இழந்துவிட்டார். அவருக்கு கைக் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இதனால் எழில் மற்றும் அமிர்தாவின் காதலுக்கு வீட்டில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எழிலின் தாய் பாக்யாவும், எழிலின் அண்ணன் மனைவி ஜெனியும் மட்டுமே ஆதரவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் எழிலுக்கும் வர்ஷினிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. பணத்திற்காக தான் இந்த திருமண ஏற்பாடுகள் நடந்தது. இது ஒரு கட்டத்தில் பாக்யாவிற்கு தெரிய வர அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க புள்ளைய தட்டி கேக்க துப்பு இல்ல, என்ன கேள்வி கேக்குறீங்க? ஈஸ்வரியை வெளுத்து வாங்கிய பாக்யா.! 1
தனக்கும் தனது கணவர் கோபிக்கும் இதுபோலத்தான் கட்டாயத் திருமணம் செய்து வைத்து எங்கள் வாழ்க்கை இப்படி நாசமாகிவிட்டது. அதேபோல மீண்டும் ஒரு கட்டாயத் திருமணத்தால் என் மகன் வாழ்க்கையும் நாசமாவதை பார்க்க தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி, எழில் காதலித்த அமிர்தா உடனே அவருக்கு திருமணத்தை முடித்து வைத்தார் பாக்யா. இந்தப் பிரச்சனையை பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க வீட்டை உடனடியாக காலி செய்து விட்டு செல்லுமாறு கோபி பாக்யாவிற்கு நெருக்கடிகள் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் எழில் மற்றும் அமிர்தாவை வாசலிலேயே நிறுத்தியே வீட்டிற்குள் வரக்கூடாது என்று ஈஸ்வரி பாட்டி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய பாக்யா உங்கள் மகன் என்னை விவாகரத்து செய்த போது அவர் மேல்தான் தவறு இருந்தது. என் மேல் எந்த தவறும் இல்லை, அது போல் தற்போது எழில் மேல் எந்த தவறும் இல்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  நடுவர்கள் கொடுத்த டாஸ்கை பார்த்து முகம் சுழித்த சிவாங்கி.! அப்படி என்ன கொடுத்தாங்க?

உங்க புள்ளைய தட்டி கேக்க துப்பு இல்ல, என்ன கேள்வி கேக்குறீங்க? ஈஸ்வரியை வெளுத்து வாங்கிய பாக்யா.! 3
அவன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டது எந்த விதத்திலும் தவறு கிடையாது, பணத்திற்காக அவனை திருமணம் செய்து வைக்க முடிந்த உங்கள் மேல் தான் தவறு என்று தனது மாமியாரை எதிர்த்து காட்டமாக பேசுகிறார் பாக்யா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Video Below..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment