Categories: சினிமா

லோகேஷ் கூட சண்டையா? வீடியோவை வெளியிட்டு உண்மைகளை உடைத்த த்ரிஷா.! அப்போ confirm-ஆ?

வெளியிட்டது

தளபதி 67 படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டார் என்கிற தகவல் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்த நிலையில், தற்போது காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திரிஷா. தமிழ் திரையுலகில் இன்று வரை கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 39 வயதாகும் திரிஷா இன்றளவும் இளமை குறையாமல் அப்படியே இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இதுவரை சுமார் 66 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் திரிஷா. தற்போது தனது 67வது படமாக விஜயின் 67 ஆவது படத்தில் இணைந்திருக்கிறார். அந்த படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த வீடியோ வெளியாகி சுமார் ஐந்து நாட்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கூட சண்டையா? வீடியோவை வெளியிட்டு உண்மைகளை உடைத்த த்ரிஷா.! அப்போ confirm-ஆ? 1
இந்த நிலையில் காஷ்மீரில் படக்குழுவினர் இருக்கும் நிலையில் திரிஷா லோகேஷ் கனகராஜ் உடன் ஏற்பட்ட சண்டையால் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும், அவர் மீண்டும் சென்னை திரும்பி விட்டார் என்றும் தகவல்கள் கொடி கட்டிப் பறந்தது. இதனால் லோகேஷ் கனகராஜை அனைவரும் கலாய்க்க தொடங்கியிருந்தனர். லோகேஷ் கனகராஜின் படங்களில், ஹீரோயினை கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எனவே மன்சூர் அலிகான் திரிஷா தலையை வெட்டி எடுத்து வருவது போல ஓப்பனிங் சீன் வைத்து விட்டீர்களா? என்று லோகேஷ் கனகராஜ் அனைவரும் கலாய்க்க தொடங்கியிருந்தனர். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இதற்கு இடையே தற்போது காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு திரிஷாவே பதிலடி கொடுத்திருக்கிறார். விமானத்தில் பறக்கும் பொழுது காஷ்மீரில் வீடியோ ஒன்றை எடுத்து அதில் காஷ்மீர் என்ற ஹேஷ்டேக்குடன் அவர் தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் காஷ்மீரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்று அங்கு விற்கப்படும் காஷ்மீர் உணவு ஒன்றை சுவைத்து அந்த புகைப்படத்தையும் பதிவேற்றி இருக்கிறார்.

இதனால் லியோ படத்திலிருந்து தான் விலகவில்லை என்பதை சூசகமாக அறிவித்து இருக்கிறார் திரிஷா. லோகேஷ் கனகராஜுக்கும் திருஷாவுக்கும் சண்டை எனவும், மூன்று நாட்களில் திரிஷாவின் சோலியை முடித்து அனுப்பி விட்டார் என்றும் வதந்திகள் கொடி கட்டி பறக்கத் தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து வதந்திகளுக்கும் ஒரே போஸ்டில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திரிஷா. இதனால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ் காட்டி தரமான சம்பவம் செய்ய இருப்பதாக தெரிகிறது. நீங்களும் அந்த செய்தியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below Video..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்