சமூக வலைத்தளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் தற்போது ராஜா ராணி 2 சீரியல் நடிகையை திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது குறித்து அந்த சீரியல் நடிகையே விளக்கம் அளித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகி வைரலாகும் ஒரு பெயர்தான் டிடிஎஃப் வாசன். இவர் தனது உயர் ரக பைக்கில் சாலைகளில் அதிவேகமாக செல்வதும், செல்லும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் என்று 2k கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஒரு யூடியூபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி அதிவேகமாக சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் வண்டியில் செல்கிறார் என்றும், மேலும் அத்துமீறி கூட்டம் கூட்டுவது, வாகனத்தில் அதிவேகமாக செல்வது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் வாசன். இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க வாசன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மஞ்சள் வீரன் என்கிற படத்தில் அவர் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

23 வயது ஆகும் டிடிஎஃப் வாசன் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல், பல இளைஞர்களை கெடுப்பதாக நெட்டிசன்கள் பெரும் அளவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது டிடிஎஃப் வாசன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் இன்று டிடிஎஃப் வாசன் விஜய் தொலைக்காட்சியில் நடித்து வந்த நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியானது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ராஜா ராணி தொடரில் ஹீரோ சரவணனின் கடைசி தம்பி ஆதியின் மனைவியாக ஜெசி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் சங்கீதா. இந்த தொடர் முடிந்த பிறகு தற்போது அவர் எந்த தொடரிலும் கமிட் ஆகாமல் போட்டோ ஷூட், ரீல்ஸ், வீடியோக்கள் என்று பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும். தன்னுடைய கணவர் பெயர் V-ல் ஆரம்பம் ஆகும் என்றும் அறிவித்திருந்தார். இதனால் சங்கீதா மற்றும் வாசன் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி கிளம்பியது.
அதற்கு முக்கிய காரணம் சங்கீதாவின் சகோதரரும் வாசனும் நெருங்கிய நண்பர்கள். எனவே தனது வருங்கால கணவர் பெயர் V என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்று சங்கீதா கூறி இருந்ததால் அது வாசன் தான் என்று நெட்டிசன்கள் புரளியை கிளப்பத் தொடங்கினர். இந்த நிலையில் தற்போது சங்கீதா தனது திருமண பத்திரிகையை வெளியிட்டு தன்னுடைய கணவர் பெயர் விக்னேஷ் என்றும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். மேலும் இதுதான் தன்னுடைய நிஜ பத்திரிக்கை என்று பத்திரிக்கை பகிர்ந்திருக்கிறார். வாசன் தன்னுடைய இளைய சகோதரர், இதுபோன்ற புரளிகளை பரப்பாதீர்கள், உங்கள் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் சங்கீதா வாசன் திருமண சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. சங்கீதா விளக்கம் கொடுத்த அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O