போலீசையே மிரட்டுவீங்களா? பேட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிடிஎஃப் வாசன்.!

வெளியிட்டது

பிரபல யூடியூபர் மற்றும் பைக் ரேஸரான டிடிஎஃப் வாசன் தற்போது ஒரு பேட்டியில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞர்கள் பலருக்கும் ஒரு உயர் ரக பைக் ஒன்றை வாங்கி அதை ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த ஆசைக்கு தூபம் போடும் விதமாக யூடியூபில் பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். 22 வயதே ஆகும் டிடிஎஃப் வாசன் தனது பெற்றோர்களின் பணத்தில் உயர் ரக பைக் ஒன்றை வாங்கி அதை தெருக்களில் அதிவேகமாக ஓட்டி அதன் மூலமாக பிரபலமானார். இவர் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். பக்குவம் இல்லாத பேச்சும், பக்குவம் இல்லாத செயல்களாலும் இவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் கடலூருக்கு கடை திறப்பு விழாவிற்கு சென்ற இவரின் ரசிகர்கள் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு பைக்குகளை ஓட்டிக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் போலீசார் தடியடி நடத்தி அந்த கூட்டத்தை கலைக்க நேர்ந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போலீசையே மிரட்டுவீங்களா? பேட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிடிஎஃப் வாசன்.! 1

இதன்பின்னர் அது குறித்து வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன், எந்த போலீஸ் நம்மை அடித்து விரட்டினார்களோ அவர்களே நம்மை ராஜ மரியாதையுடன் நடத்தும் காலம் விரைவில் வரும் என்று பேசினார். மேலும் கேஸ் வாங்குவதெல்லாம் துணிக்கடையில் கட்ட பை வாங்குவது போல் நமக்கு எளிதானது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுபோல தொடர்ந்து பேசி வரும் அவருக்கு எதிராக இணையதளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதிவேகமாக பைக் ஓட்டுவது பல இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுவதாக இருப்பதாக இணைய நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதுகில் தனது ரசிகர்களுக்கு மத்தியில் தான் சிக்கிக் கொண்டது போன்ற டாட்டூவை அவர் போட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு பேட்டியின்போது கோபத்தில் அவர் பாதியில் வெளியேறி சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.


தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த அவர் பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் சர்ச்சைக்குரிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு கொண்டே இருந்ததால். அதற்கு பதில் சொல்ல முடியாமல், தான் ஏற்கனவே பல துன்பங்களில் இருக்கிறேன். என் இடத்திலிருந்து பார்த்தால் தான் உங்களுக்கு அது புரியும். சர்ச்சையான ஒரு கேள்வி என்றால் பரவாயில்லை, பேட்டி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கேள்விகளை நீங்கள் கேட்டு வருகிறீர்கள். போதும் நான் பேட்டியை விட்டு செல்கிறேன், என்று கூறி மைக்கை கழற்றி எறிந்து விட்டு பேட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் டிடிஎஃப் வாசன். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

Video Embed Code Credits: Newsglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்