நம்ம அசின் மகளா இது? இவளோ நல்லா வளந்துட்டாங்களே.! மகளின் புகைப்படங்களை வெளியிட்ட அசின்.!

நடிகை அசின் தனது மகள் கிறிஸ்துமஸ்க்காக கேக் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் “நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா” என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவரது முதல் வெற்றித் திரைப்படம் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான “அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது.கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

நம்ம அசின் மகளா இது? இவளோ நல்லா வளந்துட்டாங்களே.! மகளின் புகைப்படங்களை வெளியிட்ட அசின்.! 1

விளம்பரம்

நம்ம அசின் மகளா இது? இவளோ நல்லா வளந்துட்டாங்களே.! மகளின் புகைப்படங்களை வெளியிட்ட அசின்.! 3

அதன் பின்னர் வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான “கஜினி”யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால் பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். 2015ம் ஆண்டு அவர் கடைசியாக ஆள் இஸ் வெல் என்ற படத்தில் நடித்தார். பின்னர் ஜனவரி 18, 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரம்மாண்ட வெற்றி..! வாழை படத்தின் வெற்றியை கொண்டாடிய இயக்குனர் Mari selvaraj..!

நம்ம அசின் மகளா இது? இவளோ நல்லா வளந்துட்டாங்களே.! மகளின் புகைப்படங்களை வெளியிட்ட அசின்.! 5

நம்ம அசின் மகளா இது? இவளோ நல்லா வளந்துட்டாங்களே.! மகளின் புகைப்படங்களை வெளியிட்ட அசின்.! 7

விளம்பரம்

இந்த தம்பதிகளுக்கு ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத அசின் தனது மகளின் பிறந்தநாளுக்கு மட்டும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அந்த வகையில் கடந்த வருடம் மகளின் பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்த இந்த வருடம் மகளின் 5வது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதன் பின்னர் தற்போது தான் அவர் மகளின் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். கிறிஸ்துமஸ்க்காக மகள் கேக் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment