Categories: சினிமா

TVK மாநாட்டை தொகுத்து வழங்க போகும் தொகுப்பாளர்கள் இவர்களா..? வெளியான தகவல்..!

வெளியிட்டது

தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து உள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு என கூறிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். அண்மையில் கட்சியின் கொடியையும் பாடலையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார் நடிகர் விஜய்.

TVK மாநாட்டை தொகுத்து வழங்க போகும் தொகுப்பாளர்கள் இவர்களா..? வெளியான தகவல்..! 1

தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தகட்டமாக முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளார் விஜய். நாளை விக்கிரவாண்டியில் இந்த மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டிற்காக காத்து இருக்கின்றனர்.இந்த மாநாட்டை நாளை தொகுத்து வழங்க போகும் தொகுப்பாளர்கள் குறித்து அதிரடியாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நாளை இந்த மாநாட்டை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான மகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்