ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபுவின் “வீட்ல விஷேசங்க” படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!!

வெளியிட்டது

ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய மீடியா வாழ்க்கையை துவங்கியவர் நடிகர், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோவில் பிரபலமாக இருந்த இவர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் சின்ன கதாபாத்திரமாக ஆர்.ஜே.பாலாஜியாகவே தோன்றினார். பின்னர் இயக்குனர் சுந்தர்.சி இவரை “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் துணை நடிகராக அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து நானும் ரவுடி தான், தேவி, தேவி 2, வடகரி, இது என்ன மாயம் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கொண்டிருந்தார்.

ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபுவின் "வீட்ல விஷேசங்க" படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 1

அடுத்தடுத்து பல படங்களில் துணை நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்த இவர், சொந்த முயற்சியில் 2019ஆம் ஆண்டு கே.ஆர்.பிரபு என்பவர் இயக்கத்தில் “LKG” என்ற படத்தின் மூலம் நாயகனாக மாறினார். அவ்வப்போது வரும் நல்ல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த இவர், கதை, திரைக்கதை எழுதி அடுத்ததாக நயன்தாராவை நாயகியை வைத்து அரசியல், ஆன்மீகம் போலி ஏமாற்றுதலை மையமாக வைத்து எடுத்த “மூக்குத்தி அம்மன்” படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படம் பெற்ற வெற்றி கொடுத்த ஊக்கத்தில் அடுத்ததாக இவர் இப்பொது “வீட்ல விஷேசங்க” படத்தை முடித்து படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, கே.பி.ஏ.சி.லலிதா ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

ஹந்தியில் வெளியான “பதாய் ஹோ” படத்தின் ரீமேக்கான இதில் 60 வயதை நெருங்கியுள்ள ஒரு தந்தையும் , தாயும், கருத்தரிக்க திருமண வயதில் இருக்கும் பாலாஜி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்குறார் என்பதே படத்தின் கலகலப்பான கதைக்களம். இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ரசிகர்கள் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் கொடுத்துள்ளதை காணலாம்.

மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்கும் விதமாகவே தன்னுடைய படங்களை அமைத்து வரும் பாலாஜி இந்த படத்திலும் நல்லதொரு விஷயத்தை தான் தைரியமாக கையில் எடுத்து பேசியுள்ளார்.

ரீமேக் படம் என்றாலும் இங்குள்ள மக்களுக்கு பொருந்த கூடிய வகையில் சிறப்பாகவே திரைக்கதை அமைத்து எழுதியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

படத்தை இப்பொது பார்த்துள்ள ரசிகர்கள் பலரும் படம் உண்மையில் மிக அருமையாக உள்ளதாகவும், நீண்ட நாட்களில் வெளியான மிக நல்ல குடும்ப திரைப்படம் இது எனவும் பாராட்டி வருகிறார்கள். இது கண்டிப்பாக குடும்பத்துடன் அனைவரும் காண வேண்டிய திரைப்படம் எனவும் பாராட்டி வருகிறார்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்