Categories: சமூகம்

துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் இரண்டு பேர் கொலை! இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!!

வெளியிட்டது
துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் இரண்டு பேர் கொலை! இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!! 1
Indian army soldiers take positions during their patrol near the Line of Control in Nowshera sector, about 90 kilometers from Jammu, India, Sunday, Oct. 2, 2016. India said Thursday it carried out “surgical strikes” against militants across the highly militarized frontier that divides the Kashmir region between India and Pakistan, in an exchange that escalated tensions between the nuclear-armed neighbors. (AP Photo/Channi Anand)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராஜூரி மாவட்டத்தின் அருகே பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ள பிஏடி (எல்லை சேவை பிரிவு ) நடவடிக்கையை சுந்தர்பானி செக்டரில் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நாத்துவா கா திபா என்ற இடத்தில் இந்திய ராணுவம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

சிறப்பு சேவை பிரிவைச் சேர்ந்தவர்கள் கமாண்டோ வீரர்கள் என்று அழைப்பார்கள். இவர்கள் ராக்கெட் லாஞ்சர், பீரங்கி குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் தரப்பில் தாக்குதல் தொடுத்தனர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததால் அவர்கள் பின்வாங்கினர். துப்பாக்கிச் சண்டையில் 21 வயது இளம் ராணுவ வீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார்.பாகிஸ்தானின் ஊடுருவல் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்