மோசமான கடன்கள் பட்டியலில் இந்தியா முதலிடம்

உலகின் டாப்-10 பொருளாதார நாடுகளில் அதிக அளவிலான கடன்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அமெரிக்க நிதி நிறுவனமான புளூம்பெர்க் நிறுவனம், உலகின் டாப்-10 பொருளாதார நாடுகளில் எந்த நாடு அதிக அளவிலான கடன்களை வைத்திருக்கிறது என்ற ஆய்வு ஒன்றினை நடத்தியது.

விளம்பரம்
மோசமான கடன்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் 1

இதனைத்தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் மோசமான கடன் அளவு 5.1 சதவிகிதமாக இருந்தது. அதுவே செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு 9.1 சதவிகிதமாகவும், செப்டம்பர் 2017-ல் 10.2 சதவிகிதமாகவும், செப்டம்பர் 2018-ல் 10.8 சதவிகிதமாகவும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு இருக்கிறது. அதேபோல கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த இத்தாலி இந்த முறை இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் மோசமான கடன் அளவு 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. 3ஆம் இடத்தில் இருக்கும் பிரேசிலின் மொத்த மோசமான கடன் வெறும் 3.1 சதவிகிதம் ஆகவே இருக்கின்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  அதிக ஊதியம் தரும் நகரம்!

இதற்கு காரணமாக புளூம்பெர்க் தெரிவிக்கையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சனைகள் என சுட்டிக்காட்டியுள்ளது.

விளம்பரம்

Leave a Comment