தேசிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை தடுத்து நிறுத்த இரண்டு வழிகளை ஐக்கிய ஜனதா தளத்தில் துணைத்தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆரம்பம் முதலே எதிர்வினை ஆற்றி வருகிறார் பிரசாந்த் கிஷோர். ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத்தலைவராக இருக்கும் இவர் தனது கட்சி நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தால் தலைமையை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இது ஒரு கட்டத்தில் பிரசாந்த் கிஷோரின் ராஜினாமா வரை சென்றது. ஆனால் பிரசாந்த் கிஷோரை இழக்க விரும்பாத நிதிஷ்குமார், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
தற்போது இந்த புதிய இரு சட்டங்களையும் அமல்படுத்தாமல் தடுப்பதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் “அமைதி முறையிலான போராட்டத்தின் மூலமாக தொடர்ந்து தங்களது கருத்தை நிலை நிறுத்த வேண்டும் எனவும், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் 16 முதலமைச்சர்கள் இச்சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.