நேற்று சென்னையில் நடிகர் விஷாலின் லத்தி சார்ஜ் படத்தின் டீஸர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, உதயநிதி, விஷால், படத்தின் தயாரிப்பாளராகள் நந்தா, ராணா, நடிகை சுனைனா என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தின் டீசரை உதயநிதி வெளியிட்டு பின்னர் பேசினார். அப்போது பேசிய நடிகர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி பேசியபோது, “நானும் அவனும் ஸ்கூல், காலேஜ் போனோம்…” என பேசிய போதே விஷால் மேடையில் ஏறி தடுத்தி நிறுத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின் பேசிய உதயநிதி, “சீக்கிரமா அந்த கட்டிடத்தை காட்டி முடிங்க, ரொம்ப நாளா கல்யாணம் பண்றேன் பன்றேன்னு சொல்லி ஊர ஏமாத்திட்டு இருக்கான், சீக்கிரமா முடிங்க பா” என கலாய்த்தார். பின்னர் பேசிய விஷால், “நாங்க அப்போவே Friends தான், ஆனா என பிரச்சனை’னா என கூட்டிட்டு பொய் இவனை பத்தி கேட்டாலோ, இல்ல அவனை கூட்டிட்டு பொய் என பத்தி கேட்டாலோ, அவ்ளோ தான் முடிஞ்சு, எல்லா காலி” என ஜாலியாக பேசி கொண்டனர்.
ராணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்க, விஷால், சுனைனா நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும். லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Video Courtesy – Bingoo Box