Categories: சினிமா

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா ஆகியோரின் தெறி நடிப்பில் “கண்ணை நம்பாதே” ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் கண்ணை நம்பாதே என்கிற படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது இந்த ட்ரெய்லர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகனும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரனும் ஆவார். தற்போது இவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். இவர் முதன் முறையாக விஜய் திரிஷா ஆகியோரை வைத்து குருவி என்கிற படத்தை தயாரித்தார். அதுவே இவர் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். பின்னர் இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து திரைப்பட விநியோகஸ்தராகவும் வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா ஆகியோரின் தெறி நடிப்பில் "கண்ணை நம்பாதே" ட்ரைலர் இதோ.! 1

2009 ஆம் ஆண்டு வெளியான ஆதவன் என்கிற படத்தின் மூலமாக சிறப்பு தோற்றத்தில் நடித்தார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கண்ணை நம்பாதே என்கிற படத்திலும், மாரி செல்வராஜின் மாமன்னன் என்கிற படத்திலும், ஏஞ்சல் என்கிற படத்திலும் நடித்த வருகிறார். மாமன்னன் படத்திற்கு பின்னர் இவர் படங்களில் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார். முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்தவும் அவர் முடிவெடுத்துள்ளதாக அவரே சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கண்ணை நம்பாதே படம் மார்ச் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


அதற்கு முன்னோட்டமாக தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் என்பவர் இயக்குகிறார். இதில் நடிகர் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், நடிகைகள் ஆத்மிகா, பூமிகா சாவ்லா, வசுந்தரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் விஎன் ரஞ்சித் குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்