Categories: சினிமா

ப்ரெண்ட்ஸ் கூட “டான்” படம் பாத்தேன்.! கொஞ்சம் கூட சிரிப்பே வரல.! பயங்கரமாக கலாய்த்த உதயநிதி

வெளியிட்டது

உதயநிதி ஸ்டாலின் டான் படத்தை பற்றி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “டான்”. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என தொடர்ந்து இரண்டு படங்களும் 100 கோடி வசூலை பெற்று இருந்தது. இந்த படம் கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்று இருந்தது. படம் வெளியாகி இத்தனை நாள் கழித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பற்றிய ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ப்ரெண்ட்ஸ் கூட "டான்" படம் பாத்தேன்.! கொஞ்சம் கூட சிரிப்பே வரல.! பயங்கரமாக கலாய்த்த உதயநிதி 1

பிரபல யூட்யூபராக இருக்கும் இர்ஃபானின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். இர்ஃபான் ஒவ்வொரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சமைக்கப்படும் உணவுகளை ருசித்து ரிவ்யூ செய்யும் ஒரு youtubeபராக இருந்து வருகிறார். அவரின் சேனலுக்கு பல பிரபலங்கள் வந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட திமுகவின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலினை அவர் சிறப்பு விருந்தினராக அழைத்து, தனது தாயார் கையால் சமைத்த உணவுகளை அவருக்கு வழங்கினார். மீன் குழம்பு, பொறித்த மீன் என்று சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் சின்ன ஒரு பேட்டியை எடுத்தனர். அப்போது அவர் திமுக குறித்தும், அவர்கள் மழை நீர் தேங்காமல் இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்களை பேசிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பற்றி பேச்சு எழுந்தது. அதில் உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது டான் படத்தை வாங்குவதற்கு முன்பாக தான் அந்த படத்தை பார்த்ததாகவும், நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது எந்த இடத்திலும் எங்களுக்கு சிரிப்பே வரவில்லை, ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு நான் சிவகார்த்திகேயனை அழைத்து கல்லூரி காட்சிகளை வெட்டி விடுமாறு கூறினேன். ஆனால் அவர் அந்த காட்சிகளை நீட்டித்து விட்டார் .பிறகு இந்த காமெடிகள் எல்லாம் ஒர்க்அவுட் ஆகுமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்று சிவாவிடம் கூறியதாகவும், ஆனால் திரையரங்குகளில் எதிர்பார்த்ததை விட இந்த காமெடிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகியதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அந்த வைரல் வீடியோவை நீங்களும் காண..! Watch the below Video.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்