மிரட்டி எடுத்துள்ள அவதார்.! பிரம்மாண்டத்தின் உச்சம்.! புது ட்ரைலரை வெளியிட்டுள்ள படக்குழு.!

அனிமேஷன் படங்களில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி பலரின் மனங்களை கவர்ந்த ஒரு படம் என்றால் அது அவதார் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் பாகம் 2-ன் புதிய ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு “அவதார் தி வே ஆஃப் வாட்டர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் திரைப்படம். உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதை பெற்றிருந்தது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டி எடுத்துள்ள அவதார்.! பிரம்மாண்டத்தின் உச்சம்.! புது ட்ரைலரை வெளியிட்டுள்ள படக்குழு.! 1

விளம்பரம்

சிறந்த ஒளிப்பதிவு, விசுவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கார் விருதை அள்ளி இருந்தது. இந்த படத்தை 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்து இந்த இயக்கியிருந்தனர். இந்த படம் உலக அளவில் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்தது. வேறு எந்த திரைப்படமும் இன்று வரை இந்த வசூலை நெருங்க முடியாத அளவிற்கு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2022 டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் 3D தொழில் நுட்பத்தில் உலகம் முழுவதிலும் 160 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  வசூலை குவித்துள்ள வெந்து தணிந்தது காடு.! 3 நாள் முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

மிரட்டி எடுத்துள்ள அவதார்.! பிரம்மாண்டத்தின் உச்சம்.! புது ட்ரைலரை வெளியிட்டுள்ள படக்குழு.! 3

விளம்பரம்

அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டிரைலர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. தற்போது மற்றும் ஒரு புது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இரண்டரை நிமிடம் நேரம் கொண்டதாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாகம் 3 வரும் 2024 ஆம் ஆண்டு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. மிகப்பிரமாண்டமாக உருவாகியிருக்கும் அவதார் பாகம் 2 இன் புதிய ட்ரைலரை நீங்களும் காண.. Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Avatar

விளம்பரம்

Leave a Comment