180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஈரான் மற்றும் அமெரிக்க இடையிலான மோதல் வலுத்து வருகிறது. எப்போது வேண்டும் என்றாலும் போர் எழும் சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் போயிங் 737 ரக விமானம் பயணிகளுடன் ஈராகிலிருந்து கிளம்பி இருக்கிறது. ஆனால் எதிர்பாராதா விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து, இந்திய விமானங்களை ஈரான்-ஈராக் வான் எல்லையில் பறக்க வேண்டாம் எனவும் ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.