வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக நாள்தோறும் 10 பேர் மரணமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 2018ஆம் ஆண்டு சுமார் 1.34 இலட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 1.3 இலட்சமாக இருந்தது.
மொத்த 30.4 சதவிகித தற்கொலைகளில், வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் தற்கொலைகளின் எண்ணிக்கை 14 சதவிகிதங்களாகவும், குடும்ப சூழல் காரணமாக 4.8 சதவிகிதமும் உயர்ந்து இருக்கின்றன.

குடும்ப பிரச்சனைகள் மற்றும் நோய்வாய்ப்படுத்தல் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்கள் 18 சதவிதங்களாகவும், திருமணம் சார்ந்த பிரச்சனைகள் 6.2 சதவிகிதங்களாகவும் இருக்கின்றன. இந்த காரணிகளால் ஏற்படும் மரணங்கள் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 சதவிகிதங்கள் உயர்ந்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, வேலையின்மை,வறுமை மற்றும் போதைக்கு அடிமை போன்ற காரணங்களால் இந்தியாவில் மொத்தம் 45,743 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் 12,373 மற்றும் 6,957 மரணங்கள் மட்டும் வேலைவாய்ப்பினை மற்றும் வறுமை ஆகியவற்றால் நிகழ்ந்துள்ளன.
வேலைவாய்ப்பினமையால் நாள் ஒன்றுக்கு 7 பேரும், வறுமை காரணமாக நாள் ஒன்றுக்கு 3 பேரும் தற்கொலை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சரண் சிங் கூறுகையில், “இன்றைய சூழலில் இந்தியாவிற்கு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகிறது. அது மட்டுமின்றி 1960,70களில் இருந்த கல்வி குறித்த சிந்தனையிலிருந்து வெளிவர வேண்டும்” என கூறுகிறார்.