தி லெஜண்ட் படத்தில் அண்ணாச்சியுடன் இணைந்து நடித்த ஊர்வசி ரவுத்தேலா-விற்கும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கும் சில காலமாக பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சின்ன பயலே போய் கிரிக்கெட் விளையாடு உன் போன்ற சிறுவர்களிடம் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன் என்று ரிஷப் பண்டிற்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா பதிலடி கொடுத்திருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்ஷனில் அருள் சரவணன் அண்ணாச்சியுடன் இணைந்து தி லெஜெண்ட் படத்தில் நடித்தவர் தான் ஊர்வசி ரவுத்தேலா. தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகைகள் அண்ணாச்சியுடன் இணைந்து நடிக்க தயங்கிய போகுது தைரியமாக முன்வந்து நடித்தார் ஊர்வசி ரவுத்தேலா. தற்போது இவருக்கும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. தன்னுடன் விளையாட வேண்டாம் என்றும் சிறுவர்கள் போய் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் அவர் ரிஷப் பண்டை கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஊர்வசி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ரிஷப் பண்டிற்கும் ஊர்வசிக்கும் முதலில் பிரச்சனை ஆரம்பித்த இடம் ஊர்வசி அளித்த பேட்டியில் இருந்து தான். ஒரு பேட்டியில் ஊர்வசி ரவுத்தேலா, தான் காசியில் இருந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு டெல்லிக்கு வந்து, பத்து மணி நேரம் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அதனால் சோர்வடைந்து உறங்க சென்று விட்டதாகவும், அந்த நேரத்தில் மிஸ்டர் R.P எனக்காக வந்து காத்திருந்திருக்கிறார். எனக்கு 17 முறை அவர் போனில் அழைத்து இருந்தார், அதை நான் பின்பு தான் பார்த்தேன் என்று ஊர்வசி ரவுத்தேலா கூறியிருந்தார். இந்த பேட்டி வைரலானது. இதற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அற்ப புகழ்ச்சிக்காக, தலைப்புச் செய்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நேர்காணலில் எவ்வளவு பெரிய பொய் சொல்கிறார்கள், இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது, பெயருக்காகவும் புகழுக்காகவும் ஏங்கி கிடக்கிறார்கள், கடவுள் அவர்களை ஆசிர்வதிக்குமாறு ஆசீர்வதிக்கட்டும் என்று பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கியும் இருந்தார். இது ஊர்வசியை குறித்துதான் கூறுகிறார் என்ற சர்ச்சை எழுந்தது.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக ஊர்வசி ரவுத்தேலாவும் ஒரு பதிவை தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சின்ன பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும், உன் போன்ற சிறியவர்கள் எல்லாம் என்னை அசிங்கப்படுத்த முடியாது, இதுபோன்ற சிறுவர்களால் நான் அசிங்கப்பட மாட்டேன் என்றும் பதிவிட்டு இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் தனது பதிவை நீக்கியது போல, ஊர்வசி தனது பதிவை நீக்கவில்லை. இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை போன்றவற்றில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஊர்வசிக்கும் அவருக்கும் தொடர்ந்து வார்த்தைப்போர் நீடித்து வருவது அவர்களது ரசிகர்களிடையே சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. Watch the below video…
Youtube Video Code Embed Credits: Thanthi TV