சின்னத்திரையை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நாடகங்களில் நடித்த பின்னர் இவருக்கு மக்களிடம் சிறிது செல்வாக்கு கூடியது. அந்த செல்வாக்கை பயன்படுத்தி அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மூன்றாவது இடத்தை பிடித்தார். இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டவர் தான் அமீர். இவர் ஒரு நடன இயக்குனர் ஆவார். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலமாக நடனத்துறையில் அறிமுகமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பெற்றோர்களை இழந்த அமீர், ஒருவரின் பாதுகாப்பில் தான் வளர்ந்து வந்தார். சிறு வயது முதலே அவரிடம் வளர்ந்து வரும் அமீர், தன்னுடைய கடின உழைப்பால் விஜய் டிவியில் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ்க்கு உள்ளே வந்த உடனேயே அவர் பாவனியை ஒருதலையாக காதலிப்பதாகவும், அவரது கதையை கேட்ட பின்பு தனக்கு அவர் மீது காதல் வந்து விட்டதாகவும் கூறியிருந்தார். பாவனிக்கு ஏற்கனவே சின்னத்திரை நடிகர் ஒருவருடன் திருமணம் ஆகி இருந்தது. திருமணமான மூன்றே மாதங்களில் அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். இதை பாவனி பிக்பாஸில் இருந்த போது கூறி அழுதிருப்பார். இந்த கதையைக் கேட்ட பின்பு தான் தனக்கு பாவனி மீது காதல் வந்து விட்டதாக அமீர் கூறி இருந்தார். இவர்கள் இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி பிக்பாஸில் பங்கெடுத்தவர்களை வைத்து நடத்தப்படும் நடன நிகழ்ச்சி ஆகும். இது முதல் சீசனை முடித்துவிட்டு தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் டைட்டிலை பெற்றிருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது சீசனில் தற்போது ஆஹா கல்யாணம் என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இதற்காக போட்டியாளர்கள் பலரும் திருமண கோலத்தில் பங்கேற்று நடனமாடி வருகின்றனர். இந்த நிலையில் அமீர் மற்றும் பாவனி இருவரும் பட்டு வேட்டி, பட்டுப் புடவை கட்டி நடனம் ஆடுகின்றனர். இடையில் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற ப்ரோமோக்களும் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் கேரவனில் எடுத்துக்கொண்ட க்யூட் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் பாவனியுடன் ரொமான்ஸ் செய்து வருகிறார். அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..