தூக்கமில்லாமல் தவித்து வரும் சிவாங்கி!!மருத்துவமனையில் திடீரென அனுமதி!!!

குக் வித் கோமாளி விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி. இதில் வரும் குக்கை விட கோமாளிகளுக்கே ரசிகர்கள் அதிகம். புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா போன்றறோர் இதன் மூலம் மிக பிரபலம். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக் கொண்டு பாடகராக அனைவரது கவனத்தையும் தான் பக்கம் ஈர்த்தவர் சிவாங்கி.

அந்த போட்டியில் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இருப்பினும் அப்போது தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறக்கபட்டார். ஒளிபரப்பான முதல் சீசனில் நடிகை வனிதாவுடன் சேர்ந்து வெற்றி வாகை சூடினார்.

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய குறும்பு தனமான செயல்கள் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் கோமாளியாக தொடர்கிறார். இப்போது ஒளிபரப்பாகி வரும் 3வது  சீனின் முக்கிய கோமாளியும் இவரே.

தூக்கமில்லாமல் தவித்து வரும் சிவாங்கி!!மருத்துவமனையில் திடீரென அனுமதி!!! 1

விளம்பரம்

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் தேதி வெளியான “டான்” படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். இதுவே அவருடைய முதல் திரைப்படமாகும். அதில் தன்னுடைய பாணியில் சில காமெடிகளை செய்து அசத்தியுள்ளார்.

தொடர்புடையவை  இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 6 பேர்.! யாரெல்லாம் மாட்டி இருக்காங்க தெரியுமா?

அந்த படத்தில் அவர் பேசியுள்ள, க்ரஷ் குறித்த வசனம் குறிப்பாக பிரபலமாகி உள்ளது. மலையாள குடும்பத்தை சேர்ந்த இவர், படத்திலும் மலையாள பெண்ணாகவே நடித்துள்ளார்.

விளம்பரம்

இவ்வாறு நடிப்பிற்கு, நிகழ்ச்சிகளுக்கும் மத்தியில், இவர் தன்னுடைய படிப்பை தொடர்ந்து வருகிறார். சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பை படித்து வருகிறார். இவருடைய அம்மா ரஜினியின் அண்டிப்பில் வெளியான “சந்திரமுகி” படத்தில் வரும் “ரா ரா சரசகு ரா ரா” பாடலை பாடியவர்.

இவ்வாறு தொடர்ந்து குக் வித் கோமாளி, தன்னுடைய படிப்பு, சில மேடை பாடல் நிகழ்ச்சிகள், சில படங்கள் என தொடர்ந்து நடித்து வருவதால் கொஞ்சம் கூட தூக்கம் இன்றி தவித்துள்ளார்.

விளம்பரம்

இதனால் தற்போது உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ” health, health heath first” என தலைப்பு இட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

விளம்பரம்

Video Courtesy – Galatta Tamil.

விளம்பரம்

Leave a Comment