
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட போகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 73 வயதான டிரம்ப், நேற்று முன்தினம் மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. திட்டமிடப்படாமல் திடீரென நடந்த இந்த முழு உடல் பரிசோதனை குறித்த தகவல் வேகமாக பரவியது.
இதையடுத்து, ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் இருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்தது. இது வழக்கமான நடைமுறையே என்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருப்பதால், டிரம்ப் முன்கூட்டியே உடல் பரிசோதனையை முடித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.