தனுஷ் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் வாத்தி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருத்த படம் தான் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கியிருந்தார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷுன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கல்வியை வியாபாரமாக பார்க்கும் சில மனிதர்களிடமிருந்து எப்படி ஆசிரியர் ஒருவர் பாதுகாக்கிறார் என்பதும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முன்னேறக்கூடாது என்று நினைக்கும் தனியார் பள்ளிகளை முகத்திரையை தோலுரிக்கும் விதமாகவும் இந்த படத்தின் கதை அமைந்திருந்தாக தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான முதல் மூன்று நாட்களில் சுமாரான வசூலை பெற்றிருந்தது. இருந்தபோதிலும் 51 கோடி வசூல் வரை பெற்றிருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மன்ட் நிறுவனம் அவ்வப்போது வசூல் குறித்த நிலவரங்களை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தது. ஆரம்பத்தில் இந்த கதை நன்றாக இல்லை, தெலுங்கு படம் போல் இருக்கிறது, தெலுங்கு சாயல் கலந்திருக்கிறது என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட போதும் ஒரு வாரத்திற்கு பின்னர் குடும்பம் குடும்பமாக இந்த படத்தைச் சென்று பார்த்து வந்தனர் தனுஷ் ரசிகர்கள். இந்த படத்தின் முக்கிய பாடலாக இருப்பது “வா வாத்தி” தான். இந்த பாடலை பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருப்பார். இந்தப் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது முதலே பலரும் இதற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தும் வீடியோக்கள் வெளியிட்டோம் வந்தனர். சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் கூட ஸ்வேதாவுடன் இணைந்து தனுஷ் இந்த பாடலை பாடி இருந்தார்.
தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு அதிகார்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷின் மாணவர் ஒருவர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டி தேர்வில் முதல் இடம் பிடித்துள்ளார். அவரை அழைத்து சமுத்திரக்கனி நடத்தும் கல்வி நிலையத்தில் படித்ததால் தான் முதல் இடம் பிடித்ததாக பேச சொல்லி சமுத்திரக்கனி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் அவர் எழுதி கொடுத்த சீட்டை கிழித்து எறிந்துவிட்டு அந்த மாணவர் நான் இந்த கல்வி நிலையத்தில் படித்ததால் முதல் இடம் பிடிக்கவில்லை, நான் பாலா சார் (தனுஷ்) கொடுத்த ட்ரைனிங்கினால் தான் முதலிடம் பிடித்தேன் என்று பேசுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV