Categories: சினிமா

“அடுத்த படம் தனுஷ் கூட தான்”!! வடசென்னை 2 அப்டேட் சொன்ன வெற்றிமாறன்”!!

வெளியிட்டது

பொல்லாதவன் என்ற படத்திலேயே பல ரசிகர்கள் கவர்ந்தார் வெற்றிமாறன். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, அசுரன், வட சென்னை என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார். வெற்றிமாறன் இது வரை 5  தேசிய விருதுகளையும் வென்று உள்ளார்.

"அடுத்த படம் தனுஷ் கூட தான்"!! வடசென்னை 2 அப்டேட் சொன்ன வெற்றிமாறன்"!! 1

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணி எப்போதும் மிக பெரிய வெற்றி கூட்டணியே. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வணீக ரீதியிலான வெற்றியை பதிவு செய்தது மட்டுமின்றி நல்ல விமர்சணங்களையும் வென்றுள்ளது குறிப்படத்தக்கது. 2018ஆம் ஆண்டு வெளியான படம் “வட சென்னை”. இதன் கடைசியில் “அன்புவின் எழுச்சி – வடசென்னை 2” என டைட்டில் போடப்பட்டு 2 ஆம் பாகத்திற்கான லீட் வைக்கப்பட்டது.

ஆனால் 4 வருடங்கள் ஆகியும் இன்றும் அந்த படம் துவகைப்படவில்லை. இதனை குறித்து பல்வேறு வகையில் இயக்குனர் வெற்றிமாறனிடமும், நடிகர் தனுஷிடமும் கேள்விகள் வைக்கப்பட்டன. ஆனால் சரியான பதில் எப்போதும் கிடைத்திடவில்லை. இப்போது நடிகர் தனுஷ் – மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது.

அதில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், ” 40% வடசென்னையின் 2 படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு எங்களிடத்தில் தான் இருக்கிறது. இப்பொது நடிகர் விஜய் சேதுபதி – சூரி நடிக்கும் “விடுதலை” மற்றும் சூரியாவின் “வாடிவாசல்” படங்கள் கையிலுள்ளன. அந்த படங்கள் முடிந்தவுடன் அடுத்த படம் தனுஷுடன் தான்” என மேடையிலேயே கூறியுள்ளார் வெற்றிமாறன்.

இந்த செய்தி இப்பொது வெளியாகியுள்ளது. நான்கு வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு வெற்றிமாறன் முதல் முறை இந்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்திருப்பது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது சூர்யாவின் “வாடிவாசல்” படத்தை இயக்கி வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் முன்பு  ஏற்கனவே இவர் அறிவித்த “விடுதலை” படம் நடிகர் சூரியுடன் மும்முரமாக தயாராகி திடிரென நிறுத்தப்பட்டது.

இப்போது இந்த படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் அதிகாரியாக சூரியும், கைதியாக விஜய் சேதுபதியும் தோன்றியுள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைக்க கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய க்ளத்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகின்றனர். படம் வெகுவிரைவில் வெளியாக உள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்