“கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு”!! அசத்தும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்”!!

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற செஸ் விளையாட்டு போட்டி என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டியே. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் இதில் கலந்து கோலா எப்போதும் முனைப்புடனும் ஆர்வமுடனும் செயல்பட்டு வருவார்கள். முதல் முறை இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை 28ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

"கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு"!! அசத்தும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்"!! 1

இதில், இந்தியா உள்ளிட்ட 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்திய அணி சார்பில் 3 அணிகள் களமிறங்கவுள்ளன.  இந்தியா-1 ஓபன் அணியில் விதித் குஜ்ராத்தி, பி ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல். நாராயண் மற்றும் சசிகரன் கிருஷ்ணன்.

விளம்பரம்

"கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு"!! அசத்தும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்"!! 3

இந்தியா-2 ஓபன் டீம் உறுப்பினர்கள் நிஹால் சரின், டி குகேஷ், பி அதிபன், ஆர் பிரக்னாநந்தா மற்றும் ரவுனக் சத்வானி. இந்தியா-3 ஓபன் அணியில் சூர்யா சேகர் கங்குலி, எஸ்.பி. சேதுராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி மற்றும் அபிமன்யு பூரணிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓபன் டீமில் உள்ள 15 வீரர்களும் கிராண்ட் மாஸ்டர்கள் ஆவார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  "ரோலக்ஸ்..பாத்தாலே பயமா இருக்கு"!!"லோகேஷ் மொத்தமா செஞ்சிட்டாரு"!! சூர்யாவின் ரோலக்ஸை பார்த்து பயந்துள்ள டில்லி கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட்.

"கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு"!! அசத்தும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்"!! 5

இந்தியா-1 மகளிர் அணியில் கோனேரு ஹம்பி, டி ஹரிகா, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் உள்ளனர். இந்தியா-2 மகளிர் அணியில் வந்திகா அகர்வால், சௌமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரௌட் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியா-3 மகளிர் அணியில் ஈஷா கரவாடே, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போடா, நந்திதா பிவி மற்றும் விஷ்வா வஸ்னாவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

"கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு"!! அசத்தும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்"!! 7

இந்த விளையாட்டு போட்டியின் மூலம் இந்தியாவில் மேலும் செஸ் விளையாட்டு வீரர்கள் அதிகமாவார்கள் என கூறப்படுகிறது. அதற்கான பல்வேறு வகையிலான முழு ப்ரோமோஷன்களும், ஊக்குவித்தல் விளையாட்டுக்களும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்போது இதில் மற்றொரு நூதன விஷயமும் நடந்துள்ளது.

விளம்பரம்

"கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு"!! அசத்தும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்"!! 9

அதாவது கடலில் 60 அடி ஆழத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து , விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் வகையில் செஸ் தம்பியுடன் நீருக்கு அடியில் செஸ் விளையாடி அசத்தி உள்ளார் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த். மேலும் நம்ம சென்னை பேனரை நீருக்கடியில் பிடித்து நமது தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தியது மேலும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மை தான்...ஆனா!!சூர்யா -பாலா படம் குறித்த உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ள படக்குழு

Video Courtesy – Tell My Story

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment