Categories: சினிமா

சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் மினி டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இருந்து ஒரு மினி டீசர் ஒன்றை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த நடிகர் சந்தானம் பின்னர் தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக நடிக்கத் தொடங்கினார். பின்னர் காமெடி டிராக்கை கைவிட்டு விட்டு தற்போது படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘80ஸ் பில்டப்’ மற்றும் ‘டிடி ரிட்டன்ஸ்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் கைவசம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் மினி டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1
இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம் எஸ் பாஸ்கர், மாறன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்க ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். படத்தை விஸ்வ பிரசாத் தனது ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்பதை தலைப்பாக வைத்திருப்பதன் மூலம் இந்த படம் ஒரு காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நெற்றியில் பட்டை, கையில் திரிசூலத்துடன் பண மழை கொட்டுவது போன்ற முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், தற்போது மினி டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: People Media Factory

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்