யுவர் ஸ்மைல் இஸ் நைஸ்.! பெண் பாடகியிடம் கூறிய வைரமுத்து.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

வெளியிட்டது

ஏற்கனவே வைரமுத்து குறித்து பெண் பாடகிகள் ஒருவர் ஒருவராக புகார் செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாடலைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது பாடகியின் சிரிப்பை வர்ணித்த வைரமுத்துவின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் கவிஞராகவும், பாடலாசிரியராகவும் கோலோட்சி வருபவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் என்னும் படத்தின் பொன்மாலைப் பொழுது என்கிற பாடலின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு பாடலாசிரியராக அறிமுகமாக இருந்தார் வைரமுத்து. மேலும் பல நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார். சுமார் 7,000 க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கும் அவர் பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் வைரமுத்து குறித்து பாடகி சின்மயி சில வருடங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யுவர் ஸ்மைல் இஸ் நைஸ்.! பெண் பாடகியிடம் கூறிய வைரமுத்து.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 1

அதில் பாடுவதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது தனி அறையில் வைத்து தன்னிடம் வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என்கிற மிகப்பெரிய குற்றச்சாட்டை கூறியிருந்தார் சின்மயி. அந்தப் பிரச்சனை நேற்று வரை ஓயாமல் இருந்து வருகிறது. நேற்று வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்திருந்ததை கடுமையாக சின்மயி விமர்சித்திருந்தார். அவரை தொடர்ந்து பாடகி வினைதா என்பவரும் வைரமுத்து ஒரு சீப்பான மனிதர், அவரை பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு அனுப்பிய போது தன்னை தனியாக ஒரு இடத்திற்கு வரச் சொன்னார் என்று சொல்லி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியையும் நேற்று சின்மயி பகிர்ந்ததால் சர்ச்சை பெரிதாகிக் கொண்டே போனது.

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் வைரமுத்து தற்போது வீடியோ ஒன்றில் பாடகி ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் குறித்து இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. அதில் பாடகி ஒருவருக்கு பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது நடுவில் அவரை பார்த்து உங்கள் ஸ்மைல் மிக அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் வைரமுத்துவை தற்போது கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே சின்மயி வினைதா ஆகியோர் வைரமுத்து குறித்து பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர் என்றும், அவர் பெண்களின் முகத்தைப் பார்த்தே பேச மாட்டார் என்றும், அரசியல் கட்சிகளின் உதவி கொண்டு அவர் பல தவறுகளை செய்து வருவதாகவும் கூறிவரும் நிலையில் இந்த காணொளி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் வைரமுத்துவிற்கு எதிராகவும், அவரை கலாய்த்தும் ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்