விக்ரமனுக்கு வாக்களிக்கும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் போட்டிருந்த பதிவிற்கு எதிராக வனிதா தற்போது ஒரு புதிய பதிவை போட்டு இருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர், சிட்டிங் எம்.பி இவ்வாறு ரியாலிட்டி ஷோவில் பங்கெடுத்த ஒருவருக்காக வாக்குகள் கேட்பது “அரசியல் நாடகம்” என்று அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். விடுதலைக் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராக இருப்பவர் விக்ரமன். இவர் டிவி விவாதங்களில் அக்கட்சியின் சார்பில் பங்கெடுப்பது மட்டுமில்லாமல் தேசிய மற்றும் வட இந்திய ஊடகங்களிலும் சென்று தமிழகத்தின் பிரச்சனைகள் பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கியவர், பின்னர் செய்தி வாசிப்பாளராக மாறினார். பின்னர் youtube சேனல்களில் பொலிட்டிக்கல் ஆங்கர் ஆகவும் இருந்தார். பின்னர் தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த இவர் அந்த கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனுக்கு மிக நெருக்கமாக இருந்தார். பிக்பாஸ் செல்வதற்கு முன்பாக திருமாவளவனிடம் அனுமதி பெற்றே அவர் சென்றிருக்கிறார். விக்ரமன் பிக்பாஸில் கலந்து கொண்டது பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்த தொல் திருமாவளவன் அவர் எந்த இடத்திலும் தான் ஒரு அம்பேத்கர், பெரியார் வாதி என்பதை மறைக்கவில்லை. மேலும் தான் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவன் என்பதையும் அவர் மறைக்கவில்லை. நேர்மையாக விளையாடுகிறார், அவரை நினைத்து பெருமை தான் படுகிறேன் என்று திருமாவளவன் பேசியிருந்தார். இந்த வாரம் இறுதிப் போட்டி நடைபெற இருப்பதால் தம்பி விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். மேலும் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் போட்டிருந்தார். இதற்கு தற்போது வனிதா தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்.
அரசியல் ஆதாயத்திற்காக கமலஹாசன் தனது கட்சியை சேர்ந்த சினேகனுக்கு இவ்வாறு ஓட்டு கேட்கவில்லை, விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சமுதாய வாக்கினால் தான் அவர் வெற்றி பெற்றதாக இருக்கும். பார்வையாளர்களில் வாக்கெடுப்பின்படி அது கண்டிப்பாக இருக்காது என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் விக்ரமன் நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார் அவருடைய சொந்த அடையாளத்தை பயன்படுத்தியும் அவரது ரசிகர்களை பயன்படுத்தியும் அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். தொல் திருமாவளவன் தேவையில்லாமல் தனது அரசியல் கட்சியின் செல்வாக்கை தேவையில்லாமல் புகுத்துகிறார், விக்ரமனை கைப்பாவையாக காட்டுகிறார், என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார் வனிதா.
மேலும் ரியாலிட்டி ஷோக்களில் அரசியல் செல்வாக்கு செலுத்துவது சரியல்ல. ஒரு விளையாட்டுத தளத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவது சரியில்லை. இது முற்றிலும் நியாயமற்றது. ஒரு தலைவர் அவரது தொண்டருக்காக ஓட்டு கேட்பது முறையற்ற செயல் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். வனிதாவின் இந்த பதிவு தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.