சின்னத்திரை நடிகை வனிதா தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக்க முடிவெடுத்து இருப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார். தனது மகளுக்கு 18 வயது முடிவடைந்து இருக்கும் நிலையில் அவரை படத்தில் நடிக்க வைக்க கதை கேட்டு வருவதாக தற்போது வனிதா கூறி இருக்கிறார். மேலும் தனது மகளின் போட்டோ ஷூட்களையும் அவர் சமூக வலைதளப்பட்டத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.ஜோவிகாவைப் பார்க்க வனிதாவின் தங்கைகளான ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா போலவே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் வனிதா. விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர் தனது தந்தை, தாய், தங்கைகள், அண்ணன் என அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். மூன்று கணவர்களும் விவாகரத்தான நிலையில் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். தற்போது இரண்டாவது மகளையும் அவரது தந்தை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றதால் மூத்த மகள் ஜோவிகாவுடன் மட்டும் வாழ்ந்து வருகிறார்.
மூத்த மகள் ஜோவிகாவுக்கு சமீபத்தில் 18வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்திருப்பதாக வனிதா அறிவித்திருக்கிறார். இது குறித்து வனிதா கூறும் பொழுது, “ஜோவிகா சினிமாவில் நடிப்பது உறுதி தான், மும்பையில் இருக்கும் பிரபல நடிகர் அனுபம் கேர் பயிற்சி இன்ஸ்டியூட்டில் ஒரு வருடம் பயிற்சி பெற்றுள்ளார். இந்த இன்ஸ்டியூட்டில் தான் பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா, வருண் தவான் உள்ளிட்டோர் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு துறையில் இருந்து ஜோவிகாவுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட, நல்ல கதாபாத்திரத்தையும் கதையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நல்ல கதாபாத்திரம் வந்ததும் விரைவில் நடிக்க இருக்கிறார் என கூறியுள்ளார். ஜோவிகாவைப் பார்ப்பதற்கு அப்படியே வனிதாவின் தங்கைகளான ஸ்ரீதேவி விஜயகுமார் ப்ரீத்தா விஜயகுமார் போலவே இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.!