கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் செய்திதான் நயன்தாரா விக்னேஷ் இரட்டை குழந்தையை பெற்றிருக்கும் செய்தி. திருமணமாகி நான்கு மாதங்களில் எப்படி இரட்டை குழந்தை பிறக்கும் என்று பலரும் கலாய்க்கும் தொணியில் நயன்தாரா விக்னேஷ் சிவனை கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் உண்மையிலேயே வாடகை தாய்முறையில் தான் குழந்தை பெற்றனர் என்று செய்தி பரவத் தொடங்கியது. நயன்தாரா விக்னேஷ் சிவன் விதிமுறைகளை மீறி வாடகை தாய் முறை மூலமாக குழந்தை பெற்றிருப்பதாக அமைச்சர் வரை செய்தி சென்றது. இந்தியாவில் வாடகை தாய்க்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது. திருமணம் ஆகி 5 வருடங்கள் கழித்து தான் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தம்பதிகள் இருவரில் நெருங்கிய உறவினர்களில் ஒருவர் தான் வாடகை தாயாக இருக்க முடியும். தம்பதிகள் இருவரில் ஒருவர் குழந்தை பெற தகுதி அற்றவராக இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரே ஒரு முறை மட்டுமே வாடகை தாயாக இருக்க முடியும். அதுவும் தம்பதிகளுக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அந்த வாடகை தாய்க்கு 16 மாத காலத்திற்கு இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் பின்பற்றினார்களா என்பது குறித்து தெரியவில்லை. அதிகாரிகளை வைத்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். திருமணம் ஆகி நான்கே மாதங்களில் எப்படி இவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிந்தது என்று நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக வனிதா ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் அவர், அன்பான பெற்றோருக்குப் பிறந்த 2 குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன இருக்க முடியும், ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்களை முதலில் சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி குடுக்கறதும், ட்வீட் போடுறதும், திருந்தவே மாட்டீங்களா?. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முட்டாள்களாகிய நீங்கள் இதையெல்லாம் விட்டுவிடப் போகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? காத்திருந்து பாருங்கள். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரு அழகான பெற்றோராக மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை தொடங்குங்கள்.
யார் என்ன சொன்னாலும் நீங்கள் புறக்கணித்து விடுங்கள். குழந்தைகளைப் பெறுவது நீங்கள் செய்த மிகச் சிறந்த விஷயம். குழந்தைகளுடன், தகுதியான அன்புடனும் அக்கறையுடனும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.