பிக்பாஸ் சீசன் 6 இரண்டு நாட்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் முதலிடம் வகிப்பது பிக பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை இலட்சக்கணக்கான மக்கள் டிவியில் பார்த்து வருகின்றனர். தற்போது ஐந்து சீசன்களை முடித்துவிட்ட பிக்பாஸ் ஆறாவது சீசனில் அடி எடுத்து வைக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 போட்டியாளர்களை களமிறக்கி இருக்கிறது. ஜிபி முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மெட்டி ஒலி சாந்தி, ரட்சிதா மகாலட்சுமி, விஜே கதிரவன், விஜே மகேஸ்வரி, ஆயிஷா, திருநங்கை சிவின் நிவாசினி, குயின்சி, ஷெரினா, அமுதவாணன், அசல் கோளாறு, ராம் ராமசாமி, ஏடிகே என மொத்தம் 20 போட்டியாளர்களை உள்ளே அனுப்பி இருக்கிறது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவு என தொடங்கி இருக்கிறது சீசன் 6.

முன்பு ஒளிபரப்பான பிக்பாஸில் எல்லாம் ஒரு வார காலத்திற்குப் பின் தான் சண்டைகள் துவங்கும். ஆனால் தற்போது பழைய பிக்பாஸை பார்த்து விட்டு வரும் போட்டியாளர்கள், சண்டை போட்டால் தான் டிவியில் முகம் தெரியும் அளவிற்கு ஏதாவது ஒரு ப்ரோமோவாது கிடைக்கும் என்று நம்பி சண்டை போட துவங்குகின்றனர். இது ஒரு கட்டத்தில் பெரிதாகி வீடு முழுவதும் அமைதியற்ற இருக்கும் நிலைமையில் காணப்படுகிறது. இன்று காலை வெளியான ஒரு ப்ரோமோவில் டீக்காக பலரும் சண்டையிட்டு கொள்கின்றனர். அப்போது சிவினிடம் விஜே மகேஸ்வரி ஏதோ சொல்ல அவர் பதிலுக்கு கத்துகிறார். அதேபோல் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜி.பி முத்து இருக்கும் டீமுக்கும் மற்றொரு டீமுக்கும் ஏதோ சண்டை உருவாகி இருக்கிறது.

அப்போது ஜிபி முத்து, எதிர் அணியிடம் நீங்கள் விளையாடுவது நல்ல மாதிரியான விளையாட்டு இல்லை என்று சொல்லி சண்டை இடுகிறார். மேலும் விக்ரமனிடம் சென்று கோபமாக ஏதோ பேசுகிறார். அதன் பிறகு ரட்சிதா மகாலட்சுமி மைக்கில் சத்தமாக கத்துகிறார். இந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Vijay Television