நடிகை வனிதாவிற்கும் அவரின் குடும்பத்திற்கும் நடக்கும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. வனிதாவுடன் அவரது குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை. வனிதாவின் சகோதரிகள் மற்றும் அருண்விஜய் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். தனியொரு பெண்ணாக இருந்து பேஷன் சம்பந்தமான ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்கள் என்று இரண்டு கடைகளை நடத்தி வருகிறார் வனிதா. இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்த நிலையில் மூன்று பேருடனும் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றுவிட்டார். வீடியோ கீழே உள்ளது..

இவரின் முதல் கணவர் சின்னத்திரை நடிகர் ஆகாஷ். இவருக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன்தான் விஜய் ஸ்ரீஹரி. சிறு வயதில் இருந்தே தாய்க்கும், தந்தைக்கும் நடந்த சண்டைகளை பார்த்து வளர்ந்த சிறுவன். சிறுவனாக இருந்த போதே தாயும் தந்தையும் பிரிந்துவிட தாத்தா விஜயகுமார் பாதுகாப்பில் வளர்ந்தார். தற்போது அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். சில தமிழ் குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு 21வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து கூறியிருந்தார் வனிதா. Youtube Video Code Embed Credits: Little Talks
அதில் எனக்கு தாய்மையை முதன் முதலில் கொடுத்த உனக்கு நன்றி என்றும், நீ எப்பவுமே என்னுடைய லட்டு என்றும் வாழ்த்தியிருந்தார். அதை பார்த்த சிலபேர் ஸ்ரீஹரியின் பக்கத்தில் சென்று நீங்கள் வனிதா பையனா என்று கேட்க..நான் ஆகாஷ் பையன் என்று தந்தையை குறிப்பிட்டு கூறியுள்ளார். தன் மகன் என்றாவது ஒரு நாள் என்னைத் தேடி வருவான் என்று ஒவ்வொரு பேட்டிகளிலும் தன் தாய்மையின் ஏக்கத்தை கூறி வருகிறார் வனிதா. ஆனால் தான் வனிதாவின் மகன் இல்லை என்று முகத்தில் அறைந்தார் போல் ஸ்ரீஹரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை நீங்களும் காண..Watch the below video…