ஒரு பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் பண்ணிக்கிட்டேன்.! ராபர்ட் மாஸ்டர் பற்றி பேசிய வனிதா

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டர் பற்றி வனிதா கருத்து கூறி இருக்கும் வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ராபர்டின் பெயரை தான் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக் கொண்டதாக வனிதா பேசியிருப்பது பூதாகரமாகியிருக்கிறது. கடந்த ஒன்பதாம் தேதி பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவின் முன்னாள் காதலர் ஆவார். வனிதாவிற்கு முதலில் இரண்டு பேருடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தார். பின்னர் தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்த வனிதாவிற்கு நடன இயக்குனர் ராபர்ட்டுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்திருக்கின்றனர்.

ஒரு பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் பண்ணிக்கிட்டேன்.! ராபர்ட் மாஸ்டர் பற்றி பேசிய வனிதா 1

 

ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் தான் அவர்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். தாங்கள் இருவரும் காதலித்து வருவதாக பல பேட்டிகளில் வனிதாவே கூறியிருந்தார். இந்த நிலையில் இராபர்ட்டை விட்டும் வனிதா விலகி தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக அவரிடமிருந்து விலகி தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். வனிதாவின இரண்டாவது மகளை அவரது தந்தையே அழைத்து சென்றுவிட, தற்போது தனது மூத்த மகளுடன் அவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ்க்கு சென்றுள்ள ராபர்ட் மாஸ்டர், ரட்சிதா மகாலட்சுமியுடன் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.

அதில் எனக்கு குடும்பம் இல்லை, தோழிகள் என்று யாரும் என்று ரட்சிதாவிற்கு ரூட் விடும் விதமாக பேசியிருந்தார் ராபர்ட். இதை பார்த்துவிட்டு வனிதாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது அவன் எனது புருஷனா? இல்லை பாய் பிரண்டா? நான் அவன் பெயரை பப்ளிசிட்டிக்காக தான் பயன்படுத்திக் கொண்டேன். மேலும் அவனுக்கு 2007 ஆம் ஆண்டு திருமணமானது, குழந்தைகள் எல்லாம் இருக்கிறது. பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது, பல பெண்களுடன் அவனுக்கு திருமணமும் ஆகியிருக்கிறது. அவனுக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறது என்று என்னிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தற்போது அவன் சிங்கிளாக இருப்பது போன்ற இமேஜை உருவாக்கி வருகிறார் என்று வனிதா பேசியிருக்கிறார். Watch the below video..

 

Youtube Video Code Embed Credits: Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்