வெகு நாட்களுக்கு பிறகு இளைய மகளை சந்தித்த வனிதா.. அப்படியே வனிதா மாதிரியே இருக்காரே.!

வெளியிட்டது

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தான் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகள். இவர்களின் மூத்த மகள் தான் வனிதா. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து வந்தார். இவரின் முதல் படமே விஜயுடன் தான். சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பிறகு தனக்கு படங்கள் சரியாக நடிக்க வராததால், இயக்குனர் பி வாசுவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்னர் அதையும் விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு மாறிய வனிதாவிற்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. ஆனால் அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இரண்டு முறையும் விவாகரத்து செய்தார். மேலும் தனது தந்தை விஜயகுமார் மஞ்சுளாவிடமும் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் தனியாக வாழ்ந்து வருகிறார்.

வெகு நாட்களுக்கு பிறகு இளைய மகளை சந்தித்த வனிதா.. அப்படியே வனிதா மாதிரியே இருக்காரே.! 1

இவரின் முதல் கணவர் சின்னத்திரை நடிகர் ஆகாஷ் ஆவார். இவர்களுக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி வெளிநாட்டில் படித்து வருகிறார். அவரும் வனிதாவுடன் பேசுவதில்லை் மேலும் தனது மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயனிதாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா. இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் வனிதா. பிக்பாஸ்க்கு பின்னர் அவர் பெரிதும் பேசப்பட்டார். சர்ச்சையான போட்டியாளராகவும் இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக தனது இளைய மகள் ஜெயனிதாவை வீடியோக்களிலோ அல்லது பொது இடங்களிலோ அவர் காட்டுவதே இல்லை. இதற்கான காரணம் குறித்து தெரியாமலே இருந்து வந்தது.

இளைய மகள் ஜெயனிதாவை அவரது தந்தை அழைத்து சென்றுவிட்டார் என்றும், அதனால் தனது மூத்த மகள் ஜோவிகாவுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது. அதனால்தான் வீடியோக்களிலோ பொது இடங்களிலோ தனது இளைய மகளை அவர் காட்டாமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் ஜெயனிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தையாக இருந்த ஜெயனிதா, பார்ப்பதற்கு அப்படியே வனிதா போல் ஆளே மாறிவிட்டார். நன்றாக வளர்ந்துவிட்ட அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்