வரலட்சுமி சரத்குமார் தனது 38 வது பிறந்தநாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவை அவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் உலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவரின் மூத்த மனைவி சாயாதேவிக்கு பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு பூஜா சரத்குமார் என்கிற தந்தையும் இருக்கிறார். வரலட்சுமி தனது தந்தை சரத்குமார் உடன் இணைந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதன் பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான தாரை தப்பட்டை என்கிற படத்தின் மூலமாக தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபித்தார். அதன் பின்னர் இவர் விக்ரம் வேதா, சண்டக்கோழி பாகம் 2, சர்க்கார், மாரி பாகம் 2, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, யசோதா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கு படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் தான் கொன்றால் பாவம். இந்தப் படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பிசியாக இருந்து வருகிறார் வரலட்சுமி. இது மட்டுமல்லாமல் தமிழில் பாம்பன், பிறந்தால் பராசக்தி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கில் சபரி மற்றும் ஹனுமான் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் சபரி படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மலையாளத்தில் கலர்ஸ் என்கிற படத்திலும், கன்னடத்தில் லகாம் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்களில் அசத்தி வரும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 38 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாளுக்காக அவரது தாயார் சாயாதேவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க செய்து பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
அந்த வீடியோவை பகிர்ந்த அவர் இந்த குழந்தைகளை நான் இவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்ளும் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள், இந்த அழகான குழந்தைகளுடன் எனது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன். நம் வாழ்க்கை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு இந்த குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். புற்றுநோயால் தப்பி பிழைத்தவர்கள், அவர்கள் முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் மத்தியில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நோயை எதிர்த்து போராடும் அனைத்து சக்தியையும் கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். இந்த பிறந்த நாளை சிறப்பாக மாற்றிய எனது தாயார் சாயா தேவிக்கு நன்றி என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O