சிறு வயதில் தான் வளர்ந்த பழைய வீட்டை சுற்றி காண்பித்த சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி.! இதோ வீடியோ.!

சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஒரு தம்பதிகள் என்று சொன்னால் அது செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகள்தான். தற்போது ராஜலட்சுமி தான் சிறு வயதில் வாழ்ந்த பழைய வீட்டை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகமே போராடிக் கொண்டிருந்தபோது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒருவர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அந்தத் திட்டத்தை எதிர்த்து பாடல்கள் பாடினார். அவர்தான் ராஜலெட்சுமி. இதன் மூலமாக பிரபலமானவர் தான் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதிகள். கிராமிய பாடல்களை தமிழகமெங்கும் உள்ள மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்த பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு. மேடைக் கச்சேரிகள், கோயில் திருவிழாக்கள் என பல இடங்களில் கிராமிய பாடல்களை கொண்டு சேர்த்த இந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய பரிசாக கிடைத்தது தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு வயதில் தான் வளர்ந்த பழைய வீட்டை சுற்றி காண்பித்த சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

சூப்பர் சிங்கர் சீனியரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அந்த சீசனின் வெற்றியாளராக செந்தில் கணேஷ் வந்தார். ராஜலட்சுமியால் வெற்றி பெற முடியவில்லை. அவர் பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் இவர்கள் இருவரும் வெளியே வந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பாடி வருகின்றனர். குறிப்பாக செந்தில் கணேஷ் என்ன புள்ள என்ற பாடலை பாடியிருக்கிறார். ராஜலட்சுமி வாயா சாமி என்கிற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் வெளிவந்த போதிலும் ராஜலட்சுமி பாடிய தமிழ் பாடலே உலகம் எங்கிலும் மிகப் பிரபலமானது. தொடர்ந்து பல பாடல்கள் வாடும் வாய்ப்பு கிடைத்தது. விருமன் படத்தில் கூட ஒரு பாடலை பாடியிருந்தார். பின்னர் அந்த பாடலை நீக்கிவிட்டு அந்த ஹீரோயின் அதிதியை படக்குழு பாட வைத்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார் ராஜலட்சுமி.

தொடர்புடையவை  விஜய் டிவி சீரியலுக்கு 'குட் பை' சொன்ன சஞ்சீவ்.! சன் டிவி சீரியலில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.!

சிறு வயதில் தான் வளர்ந்த பழைய வீட்டை சுற்றி காண்பித்த சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி.! இதோ வீடியோ.! 3

விளம்பரம்

தற்போது முதல் முறையாக அவர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். லைசன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் அவர் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் ராஜலட்சுமி நடிக்க வந்திருப்பதை பலரும் வரவேற்றம் இருந்தனர். தற்போது ராஜலட்சுமி தான் சிறு வயதில் வாழ்ந்த பழைய வீட்டை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. தற்போது மிகப்பெரிய பங்களாவை கட்டி வாழ்ந்து வரும் ராஜலக்ஷ்மி மிக குட்டி வீட்டில் வசித்து வந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Senthil Rajalakshmi

விளம்பரம்

Leave a Comment