Categories: சினிமா

சைக்கோ கொலையாளியாக மிரட்டி எடுத்துள்ள வரலக்ஷ்மி.! கொன்றால் பாவம் ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ் போன்ற பலரின் நடிப்பில் உருவாகியுள்ள “கொன்றால் பாவம்” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை வடபழனியில் உள்ள பிரசாந்த் லேபில் நடைபெற்று வருகிறது. இதில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், நடிகர் சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், சார்லி, சென்ராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் தான் வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுவதற்கு அறிமுகமானார். தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் கொன்றால் பாவம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் மோகன் ஹப்பு என்பவர் எழுதிய நாடகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சைக்கோ கொலையாளியாக மிரட்டி எடுத்துள்ள வரலக்ஷ்மி.! கொன்றால் பாவம் ட்ரைலர் இதோ.! 1
கரோலா ராத்திரி என்கிற கன்னட படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கிறார். 1980களில் நடந்த திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் தான் தமிழிலும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, மீசை ராஜேந்திரன், சென்ராயன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில் சமீபத்தில் டீசர் வெளியாகி இருந்தது. அந்த டீசரை நடிகை சமந்தா வெளியிட்டிருந்தார். தற்போது இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாந்த் லேபில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்த உடனேயே 6:00 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த படம் மூலம் ரொம்ப நாள் கழித்து ஒரு திருப்தி கிடைத்துள்ளது. வாழ்க்கையில் நான் கேட்காமலேயே சம்பளம் கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனம்தான். முதல் நாள் சற்று பயமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அது மாறியது. சின்ன படமாக இருந்தாலும் அதையும் கொஞ்சம் ப்ரொமோட் பண்ணுங்க. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது, சரத்குமார் ரத்தத்திலிருந்து வந்தவள் நான் என்று பெருமையாக பேசினார். தொடர்ந்து படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படம் மார்ச் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகயுள்ளது.  நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Trend Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்