மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி இருக்கிறது. புஷ்பா படத்தில் வரும் “ஊ சொல்றியா” பாட்டுக்கு சமந்தா ஆடியோ குத்தாட்டத்தை ஓவர் டேக் செய்யும் வகையில் தற்போது தமன்னா இந்த “காவலா” பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சுமார் 168 படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், தற்போது தனது 169 படமான ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாக தொடங்கியிருக்கிறது. அதன் முதல் படியாக இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த பாடல் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ஆக்ஷன் காமெடி கலந்த ஒரு படமாக இந்த படம் உருவாகி வருகிறது, கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் தற்போது படம் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் தற்போது முடிந்து வெளியிட்டு இருக்கு தயாராக இருக்க முடியும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் “காவலா” என்கிற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் சமீபத்தில் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் பாடலின் வரிகளை அருண் ராஜா காமராஜர் எழுதியிருக்க, ஷில்பா ராவ் பாடியிருக்கிறார். பாடல் வெளியான சில நிமிடங்களில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தையும் எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த பாடலை பார்க்கும் பொழுது புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய சமந்தாவை தமன்னா ஓவர் டேக் செய்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான “காவலா” பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV