Categories: சினிமா

கோலிவுட்டின் வசூல் நாயகன் என மீண்டும் நிரூபித்த தளபதி.! 25 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா?

வெளியிட்டது

கோலிவுட்டின் வசூல் நாயகன் என்று தளபதி விஜய் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். தற்போது வாரிசு படம் 25 நாட்களில் வசூலித்த மொத்த தொகை குறித்த அறிவிப்பை தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜு தயாரிப்பில் கடந்த 11ம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படம் தல அஜித்தின் துணிவு படத்துடன் நேரடியாக மோதியிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படமும் விஜய் படமும் நேரடியாக மோதியிருந்ததால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. மேலும் பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஒரு வாரத்திற்கு முன்பே இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகியிருந்தது. இதனால் பொங்கல் வின்னர் யார்? என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வந்த நிலையில் வாரிசு வசூல் குறித்து அடுத்த அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டின் வசூல் நாயகன் என மீண்டும் நிரூபித்த தளபதி.! 25 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா? 1
வாரிசு படம் வெளியான முதல் நாளே உலக அளவில் 17 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. பின்னர் 11 வது நாள் முடிவில் 250 கோடி வசூல் பெற்றிருந்ததாக இரண்டாவது முறையாக அறிவித்திருந்தது படக்குழு. தற்போது 25 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில் மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். படம் வெளியாகி 25 நாட்களை கடந்த போதிலும் பல திரையரங்குகளில் படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக வந்து இந்த படத்தை கண்டு களித்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள். அடுத்ததாக தளபதி விஜய் பிரம்மாண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து இருக்கிறார்.

தளபதி 67 என்ற அந்த படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. லியோ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த கதையை பொறுத்தவரை சாக்லேட் ஃபேக்டரியில் தளபதி சாக்லேட் செய்வது போலவும், கத்தி செய்வது போலவும் இரண்டு விதமான காட்சிகளை ஒரு சேர காட்டி இருந்தார்கள். இதனால் இந்த படமும் ஆக்ஷன் பிளாக் நிறைந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வாரிசு வெற்றியே முடிவடையாத நிலையில் அடுத்தடுத்த அதிரடிகளை ஆட்டநாயகன் தளபதி தொடங்கியிருக்கிறார். 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் வாரிசு வெற்றியை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்