தலை முடியை வெட்டி செம்ம Cute ஆக மாறிய ஜோதிகா.! இவங்க என்ன குட்டி குழந்தை மாதிரி ஆகிட்டாங்க.!

நடிகை ஜோதிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தனது தலைமுடியை வெட்டி செம்ம Cute ஆக மாறியிருக்கிறார் ஜோதிகா. தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த படம் “உடன்பிறப்பே”. இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாகவும் சசிகுமாருக்கு தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான 36 வயதினிலே, ராட்சசி போன்ற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

தலை முடியை வெட்டி செம்ம Cute ஆக மாறிய ஜோதிகா.! இவங்க என்ன குட்டி குழந்தை மாதிரி ஆகிட்டாங்க.! 1
தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனது கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். 2d என்டேர்டைன்மென்ட் என்னும் அந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்து உள்ளனர். குறிப்பாக சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் தேசிய விருது பெற்றிருந்தனர். சூரரைப் போற்றி திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜோதிகாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

விளம்பரம்
தொடர்புடையவை  "Midnight anxiety"!! இரவு 12 மணிக்கு ரைசா வில்சன் போட்ட ட்வீட்டால் குழப்பத்தால் ரசிகர்கள்!!

தலை முடியை வெட்டி செம்ம Cute ஆக மாறிய ஜோதிகா.! இவங்க என்ன குட்டி குழந்தை மாதிரி ஆகிட்டாங்க.! 3

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வழக்கம். ஜோதிகாவும் சூர்யா போலவே அவ்வப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக ஆக்ட்டிவாக இல்லாத ஜோதிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது தலைமுடியை வெட்டி குட்டி குழந்தை போல மாறி இருக்கிறார் ஜோதிகா.

விளம்பரம்

தலை முடியை வெட்டி செம்ம Cute ஆக மாறிய ஜோதிகா.! இவங்க என்ன குட்டி குழந்தை மாதிரி ஆகிட்டாங்க.! 5

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் வெட்டும் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு cute ஆக அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment