வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. தமிழ் திரை உலகின் டாப் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஆடியோ லான்ச்சும் இதுபோல் பிரம்மாண்டமாக நடைபெறாத வகையில் வாரிசு ஆடியோ லான்ச் நடைபெற்றது. சுமார் லட்சக்கணக்கான ரசிகர்கள் விஜயை பார்க்க குவிந்தனர். அங்கு வந்த விஜய் வழக்கம் போல் குட்டி ஸ்டோரி கூறினார். பின்னர் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார். இந்த நிலையில் ஆடியோ லான்ச் எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சன் டிவி தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி முழுவதுமாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த ப்ரோமோவில் தளபதி விஜய் ரஞ்சிதமே பாடலை பாடியிருக்கிறார். பின்னர் ரஷ்மிகா மந்தனா ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு இருக்கிறார்.
மேலும் ரஷ்மிகா மந்தனா விஜயை பார்த்து ஐ லைக் யூ என்று கூற விஜய் வெட்கப்பட்டு சிரித்து இருக்கிறார். இந்த ப்ரோமோவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் துணிவு படத்துடன் நேரடியாக மோத இருக்கிறது வாரிசு விரைவில் இந்த படத்தில் இருந்து டீசர் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Sun Tv