Categories: சினிமா

கண் ஆஸ்பத்திரியில் இருந்து சுடப்பட்டதா வாரிசு போஸ்டர்..கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய், ரஜினி ரசிகர்கள்.

வெளியிட்டது

நேற்று வெளியான தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்து வருகின்றனர். இவரை மட்டுமில்லாமல் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 169 ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கண்டுபிடித்து கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

கண் ஆஸ்பத்திரியில் இருந்து சுடப்பட்டதா வாரிசு போஸ்டர்..கடுமையாக மோதிக்கொள்ளும் விஜய், ரஜினி ரசிகர்கள். 1

ஜெயிலர் படத்தின் போஸ்டரில் ஒரு குடோனில் ரத்தக் கறைகளுடன் கூடிய கத்தி இருப்பது போன்று வெளியாகி இருந்தது. இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் கூகுளில் இருந்து பெல்ஜியம் ஸ்டீல் தொழிற்சாலை புகைப்படத்தை எடுத்து அதில் ஒரு கத்தியை சொருகி போஸ்டர் ஆக்கிவிட்டார் நெல்சன் என்று கலாய்த்து தள்ளியுள்ளனர். பீஸ்ட் பட தோல்வியால் கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் நெல்சனை கலாய்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படமான தளபதி 66 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. கோர்ட் சூட்டுடன் விஜய் அமர்ந்திருப்பது போலவும், பின்னாடி கண்ணாடிகளால் ஆன அறை போலவும் இருந்தது. படத்தின் பெயர் வாரிசு என்று அறிவிக்கப்பட தளபதி ரசிகர்கள் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து கொண்டாடி வந்தனர்.

 

இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் இது 2008ம் ஆண்டு வெளியான லாக்கோ என்ற ஆங்கில திரைப்படத்தின் காபி என்று தன் பங்கிற்கு ஒரு குண்டை தூக்கிப் போட்டார். ஜெயிலர் படத்தின் போஸ்டரை கலாய்த்ததால் ரஜினி ரசிகர்கள் விஜய் படத்தின் போஸ்டரை கலாயக்க தொடங்கினர்.

வாரசி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரின் பேக்ரவுண்டு போட்டோவை கூகுளில் தேடி கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு கண் மருத்துவமனையின் போட்டோ ஆகும். அதை பேக்ரவுண்டு போட்டோவாக வைத்து விஜயின் வாரிசு பட போஸ்டரை எடிட் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் மரணமாக கலாய்த்து வருகின்றனர்.

படத்திற்கு போஸ்டர்களை வடிவமைப்பவர்கள் சுயமாக செய்யாமல் கூகுளில் இருந்து ஒரு படத்தை எடுத்து பேக்ரவுண்டாக வைத்துக் கொண்டு எடிட் செய்கிறார்கள் இதை வைத்துக் கொண்டு ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்கின்றனர். மேலும் கபாலி கோட்டும், சிவாஜி பாஸ்ம் சேர்ந்து தான் தளபதி 66 படத்தையே உருவாக்கி உள்ளதாக ரஜினி ரசிகர்கள் விஜயை கலாய்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்