Categories: சினிமா

வாத்தி கம்மிங்..ஒத்து..! தனுஷின் “வாத்தி” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!

வெளியிட்டது

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். மேலும் அசுரன் படத்தில் இவருக்கு மகனாக நடித்த நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வாத்தி கம்மிங்..ஒத்து..! தனுஷின் "வாத்தி" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..! 1

தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்த படத்திற்கான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாக உள்ள முதல் படம் இதுவே ஆகும். படத்திற்கான பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருந்தது. மேலும் தனுஷின் பிறந்தநாள் அன்று டீசரையும் வெளியிட்டு இருந்தது படக்குழு. டீசர் நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனர் பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் கைப்பற்றி உள்ளார் . இந்த படம் டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம், வெளியாகி ஒரு மாதம் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் தனுஷ் நடிக்கும் அடுத்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

YouTube Video Code Embed Credits: Sithara Entertainments

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்