இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்திற்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்து உள்ளார். பரியேறும் பெருமாள் தொடங்கி, கர்ணன் , மாமன்னன் என தொடர்ந்து ஹிட் படங்கள் தான். இவர் தற்போது தனது வாழ்க்கையில் நடந்த ஒருதுயர சம்பவத்தை மையமாக வைத்து வாழை படத்தை எடுத்து உள்ளார்.

நாள்தோறும் கூலிக்கு வாழை தார் சுமப்பவர்கள் வாழ்க்கை வலியை மையமாக கொண்டு எடுத்து உள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் , வாழை லோடு ஏற்றி வந்த லாரி விபத்து ஏற்படும் காட்சிகளில் சில உண்மைகளை இயக்குனர் மறைத்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்து உண்மையாக நடந்த இடம் பேட்மா நகரம். இப்பகுதியில் உள்ள மக்கள் , விபத்து நடைபெற்ற போது தாங்கள் அனைவரும் சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறி உள்ளனர். இதையும் படத்தில் இயக்குனர் காட்டியிருக்கலாம், உண்மை சம்பவம் என்று சொன்னால் அனைத்தையும் எடுக்க வேண்டும் என ஆதங்கமாக பேசியுள்ளனர்.