GOAT படத்தில் அஜித், சிவகார்த்திகேயன்..? நடிகர் பிரேம்ஜி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..!

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். சாதாரணமாகவே அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகி வருகிறது. மேலும் 100கோடி வசூல் என்பது அவரின் படத்திற்கு சர்வ சாதாரணமான விஷயமாக அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் கோட் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கும் நிலையில் , படம் வருகிற ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.

GOAT படத்தில் அஜித், சிவகார்த்திகேயன்..? நடிகர் பிரேம்ஜி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..! 1

விளம்பரம்

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா , மீனாட்சி சௌத்திரி, மோகன் , பிரசாந்த் , பிரபுதேவா என பல நடிகர்கள் உள்ளனர்.ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி அனைத்தும் விற்பனை ஆகி உள்ளன.

GOAT படத்தில் அஜித், சிவகார்த்திகேயன்..? நடிகர் பிரேம்ஜி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..! 3

விளம்பரம்

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கோட் படம் வெளியாக இருப்பது விஜயின் மாபெரும் சாதனையை காண்பிக்கிறது. இப்படத்தில் நடித்து இருக்கும் நடிகர் பிரேம்ஜி, படம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில் , படம் தொடங்கிய சில நொடிகளிலேயே சர்ப்ரைஸ் தொடங்கிவிடும் என கூறி உள்ளார். மேலும் படத்தில் அஜித், சிவகார்த்திகேயன் மற்றும் டோனி இருக்கிறார்களா என கேள்விக்கு, பொறுத்திருந்து படத்தை பாருங்கள் நிறைய சர்ப்ரைஸ் உள்ளது என கூறி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment