இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்திற்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்து உள்ளார். பரியேறும் பெருமாள் தொடங்கி, கர்ணன் , மாமன்னன் என தொடர்ந்து ஹிட் படங்கள் தான். இவர் தற்போது தனது வாழ்க்கையில் நடந்த ஒருதுயர சம்பவத்தை மையமாக வைத்து வாழை படத்தை எடுத்து உள்ளார்.

இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. தற்போதுவரை பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. படம் வெளியாகி 25 நாட்களில் நல்ல வசூல் மற்றும் விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது. இப்படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் வாழை படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.