Categories: சினிமா

ஹிப்ஹாப் ஆதிக்காக அனிருத் பாடியுள்ள முதல் பாடல்.! வீரன் படத்தின் First Single ப்ரோமோ வெளியானது. !

வெளியிட்டது

ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் வீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஆதிக்காக அனிருத் பாடி இருக்கிறார்.வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த பாடல். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து இன்று இளம் நடிகராக மாறியுள்ளவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது வரை 6 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கான பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மேலும் படத்தின் பெயரும், First Look போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களின் பெருமையை ராப் பாடல்களாக பாடி பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர் “மீசைய முறுக்கு” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் இவர் பணியாற்றினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் ஆதிக்காக அனிருத் பாடியுள்ள முதல் பாடல்.! வீரன் படத்தின் First Single ப்ரோமோ வெளியானது. ! 1

 

அடுத்ததாக தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களில் நடித்தார். தற்போது அவர் வீரன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தற்போது தனது ஏழாவது படத்தில் கமிட்டாகி இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தை பெரிய பொருட் செலவில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

PT சார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பட பூஜை சமீபத்தில் தொடங்கியுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் வீரன் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. அதில் ஹிப்ஹாப் ஆதிக்காக அனிருத் பாடியிருக்கிறார். இந்த பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்