தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. தனது படங்களில் இளைஞர்களை கவரும் வகையில் வித்தியாசமான திரைக்கதையில் அசத்துவதில் இவர் வல்லவர். சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவுக்குள் இயக்குனராக நுழைந்து சிக்ஸர் அடித்தார். இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

தற்போது வரை பலருக்கும் விருப்பமான படமாக அமைந்து இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜயை வைத்து தற்போது இவர் கோட் படத்தை இயக்கி உள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. நான்கு நாட்கள் முடிவில் இப்படம் 288 கோடியை வசூல் செய்து இருந்தது. தற்போது இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகியும் , ரசிகர்களிடம் வரவேற்பினை பெறாத காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை படத்தில் காட்டியது தான் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து உள்ளார்.