தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று மிகப்பெரிய நடிகராக உயர்ந்து இருப்பவர் சிம்பு. இவர் பிரபல டி.ராஜேந்தரின் மூத்த மகன் ஆவார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தில் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் அதன் பின்னர் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது அதன் பின்னர் இவர் கோவில் குத்து மன்மதன் வல்லவன் சிலம்பாட்டம் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் இவர் கடைசியாக நடித்த படம் மாநாடு இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த படம் சிம்புவின் 47வது படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா? அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்திற்காக சிம்பு உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார். 19 வயது பையனாகவும் 40 வயது இளைஞராகவும் காட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். தற்போது இந்த தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தற்போது இந்த படம் குறித்து மக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். சிம்புவின் நடிப்பை தவிர வேற எதுவும் நன்றாக இல்லை என்றே பலரும் கருத்து கூறினர்.