32 வருடம் ஒரு தாயின் வலி..அவங்க வாழ்க்கையை படமா எடுக்கப் போறேன் – வெற்றிமாறன்

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி ஊடகங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ள செய்தி ஒன்று என்றால் அது பேரறிவாளன் விடுதலை தான். முன்னாள் பிரதமர் ராஜீவ. காந்தி கொலை வழக்கில் கைதான இவர் 31 ஆண்டுகாலத்தை சிறையிலேயே கழித்தார். முதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்த இவருக்கு 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில்நேற்று உச்சநீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. இதற்கு பின்புலமாக இருந்தவர் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள். தன் மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டி சட்டத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்தார். வெற்றிமாறன் பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

32 வருடம் ஒரு தாயின் வலி..அவங்க வாழ்க்கையை படமா எடுக்கப் போறேன் - வெற்றிமாறன் 1

முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி எனத் தொடங்கி இன்றைய முதலமைச்சர் வரை தன் மகன் விடுதலைக்காக அயராது போராடினார். மேலும் டெல்லி வரை சென்று அங்கும் சிலரிடம் கோரிக்கை வைத்தார். இப்படி பெற்ற மகனுக்காக பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் அந்த போரில் ஜெயித்தும் இருக்கிறார் அந்த தாய். இந்த நிலையில் அற்புதம்மாள் பற்றி வெற்றிமாறன் பயோபிக் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை ஒரு பேட்டியில் வெற்றி மாறன் உறுதியும் செய்துள்ளார். Youtube Video Code Embed Credits: Cineulagam

இதைப்பற்றி கூறும் போது ஒரு தாயின் 32 வருட போராட்டம் பற்றியும், நாட்டின் வரலாறு பற்றியும் படம் எடுப்பதில் தாம் மும்முரமாக இருப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், சவாலான இந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க ஏற்ற நடிகையை கூட தேர்வு செய்துவிட்டதாகவும், கூடிய விரைவில் அந்த நடிகை குறித்து அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். வெற்றி மாறன் கொடுத்த பேட்டியை நீங்களும் காண.. Watch the Below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்