Categories: சினிமா

ஹண்டர் சூடு கண்ணா..! அனல் பறக்க வெளியாக Vettaiyan படத்தின் மனசிலாயோ First Single..!

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வேட்டையன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவே லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கும் நிலையில் , இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

ஹண்டர் சூடு கண்ணா..! அனல் பறக்க வெளியாக Vettaiyan படத்தின் மனசிலாயோ First Single..! 1

அண்மையில் இப்படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. ரஜினிகாந்த் உடன், மஞ்சு வாரியார், பகத் பாசில், அமிதாப்பச்சன், ரித்திகா சிங் என பலரும் கலந்துகொண்டு உள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதனால் படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட தொடங்கி உள்ளது.

தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றுள்ளது. பாடல் வெறித்தனமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SONY MUSIC

வெளியிட்டது

புதிய செய்திகள்