Categories: சினிமா

தள்ளி செல்லும் Vettaiyan…! சொன்ன தேதிக்கு வரும் கங்குவா..! கடைசி நேரத்தில் நடந்த Twist..!

வெளியிட்டது

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படகுழு அறிவித்து இருந்தது.

தள்ளி செல்லும் Vettaiyan...! சொன்ன தேதிக்கு வரும் கங்குவா..! கடைசி நேரத்தில் நடந்த Twist..! 1

ஆனால் அதே தேதியில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்த வேட்டையன் படமும் திரைக்கு வர இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்து இருந்தது. இதனால் மிகப்பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்த்த நிலையில், நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் மூத்தவர் ரஜினி படம் வருவதே சரியாக இருக்கும், தங்கள் கங்குவா அவருடன் மோதவில்லை என கூறி போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் வேட்டையன் படம் தற்போது அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில காரணங்களால் படம் ரிலீஸ் தேதி தள்ளி சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து உள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்